×

“ஸ்லீப்பர் செல்லாக உளவு பார்க்க அனுப்பி வைக்கிறோம்”- விலகும் கட்சியினருக்கு சீமான் ரியாக்சன்

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள திடலில் வருகின்ற 27-ஆம் தேதி தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை கொடையாக கொடுத்த மாவீரர்களின் நினைவை போற்றும் விதமாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பொதுக்கூட்ட திடலில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறத. இதனை பார்வையிடுவதற்காக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பணிகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், நாம் தமிழர் கட்சியிலிருந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளுக்கு செல்கிறார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாங்கள்தான் நாம் தமிழர் கட்சியில் உள்ள நிர்வாகிகளை பல்வேறு கட்சிகளுக்கு உளவு பார்ப்பதற்காக ஸ்லீப்பர்ஸ் செல்களாக அனுப்பி வைத்துள்ளோம் என சீமான் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், “ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞரை வெட்டியவர் மட்டும் குற்றவாளி அல்ல.  அங்கு வேடிக்கை பார்த்தவர்கள் அனைவருமே குற்றவாளிகள் தான் ஏனென்றால் அங்கு வேடிக்கை பார்த்தவர்கள் ஒன்று சேர்ந்து ஐந்திற்கும் மேற்பட்டோர் அங்கே அவரை தடுக்க முற்பட்டால் அவன் ஓடி இருப்பான் அதேபோல கற்களை எடுத்து அடித்தாலும் ஓடி இருப்பான் என்பதனால் வேடிக்கை பார்த்த அனைவருமே குற்றவாளிதான். ரூ.1900 கோடி ரேஷன் அரிசியில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் போது வீணாகிவிட்டது என திமுக கூறுகிறத். ரேஷன் அரிசி கொண்டுவரும் சாக்குப் பையில் ஓட்டை உள்ளதா அல்லது ஆட்சியில் ஓட்டை உள்ளதா” எனக் கேள்வி எழுப்பினார்.