×

பாரதமாதா உயிரோடு இருந்திருந்தால் அவரையும் பலாத்காரம் செய்து கொன்றிருப்பார்கள்- சீமான்

 

இரண்டு சீட்டு 3 சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் மண்டியிட்டு வெல்வதை விட தனித்துப் போட்டியிட்டு போராடி தோற்று கூட போய் விடுவோம் என நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் 8ம் மண்டகப்படி என்ற பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இரண்டு சீட்டு 3 சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் மண்டியிட்டு வெல்வதை விட தனித்துப் போட்டியிட்டு போராடி தோற்று கூட போய் விடுவோம். இலங்கையில் நடந்தது வங்கதேசத்தில் நடந்தது எப்படி நாளை இந்தியாவில் நடக்காது என்று நம்புகிறாய். அதேபோல ஒரு தேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மான் சிலை உடைக்கப்படும் போது அற்ப கருணாநிதி சிலை எல்லாம் எம்மாத்திரம்.... உங்கள் சமாதி, உங்கள் பேனா, உங்கள் கட்டிடம் என அனைத்தும் சுக்கு சுக்காக நொறுங்கி சிதறும். 

பல லட்சம் கோடிகள் திருடுவது அதை கொடுத்து வாக்குகளை வாங்குவது தனியார் பள்ளிகளை நோக்கி எங்களது பிள்ளைகள் படை எடுக்கிற காலம் குறைந்து அரசு பள்ளி கல்லூரிகளை தேடி எங்கள் குழந்தைகள்  வருவார்கள், உலகத்தின் ஆகச் சிறந்த கல்வியை எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் கொடுப்போம். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம். காவிரியில் தண்ணீர் கேட்கும் போது ஏன் திராவிடர்களை அடித்து விரட்டுகிறார்கள்? ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சிக்காரர்களை ஓட்டு கேட்க சொல்லுங்கள் பார்ப்போம்! திமுக என்கிற திராவிட பன்னி மீது சவாரி செய்கிற உண்ணி தான் காங்கிரஸ். இவ்வளவு பெரிய நாட்டில் இல்லாத ஒரு துணை முதலமைச்சர் கருணாநிதி வீட்டில் தான் இருக்கிறாரா? இட ஒதுக்கீடு எதற்காக வந்தது? சமூக நீதி என்றால் என்ன? பத்து நிமிடம் எழுதி படிக்காமல் பதவி ஏற்க போகும் துணை முதலமைச்சர் பேசுவாரா? பிஜேபி காரனுக்கு ஜெய் ஸ்ரீ ராம்  ராமர் கோயில் கட்டி முடித்த பிறகு ஜெய் ஸ்ரீ ராம் முடிந்துவிட்டது. ராமருக்கு தற்போது மார்க்கெட் இல்லை, பாரதமாதா உயிரோடு இல்லை, உயிரோடு இருந்திருந்தால் அதையும் கற்பழித்து கொன்று இருப்பார்கள். திமுகவுக்கு முருகன் ஒரு விளம்பர மாடல்” என பேசினார்.