×

நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் ஆஜராக வேண்டும்!!

 

நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும்  புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.  ஆனால் சீமான்  ஆஜராகவில்லை.  இதை  தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சூழலில்  யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை  திரும்ப பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கமளித்துள்ளனர். விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சீமான் தரப்பு நடிகை விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.