×

தியேட்டர் வாசலில் மக்களிடம் ரிவ்யூ கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியுங்கள்- சீனு ராமசாமி

`
 

சில கட்டுப்பாடுகளுடன் திரையரங்கு வாசலில் விமர்சனம் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநங்கை நமிதா மாரிமுத்து நடிப்பில் உருவாகியுள்ள சைலண்ட் திரைபடத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கலந்து கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, “முக்கிய கதாபாத்திரத்தில் திருநங்கை ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார். அதற்காகவே இயக்குனருக்கு என்னுடைய பாராட்டுக்கள். அவர்களுக்கு சந்ததிகளே கிடையாது இவர்கள்தான் கடைசி சந்ததி, இவர்கள் யாருக்காகவும் செல்வங்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இன்று அன்பு தான்.  என்னுடைய அனைத்து படங்களிலும் திருநங்கைகளுக்கென்று சிறிய பதிவை நான் வைத்துக் கொண்டே இருப்பேன். கோழி பண்ணை செல்லதுரை திரைப்படத்தில்  கதைக்க சம்பந்தமில்லை என்றாலும் திருநங்கைகளுக்காக ஒரு குத்து பாடல் வைத்துள்ளேன். என்னுடைய படங்களில் சமூக நல்லிணக்கம் இருக்கும்.  அதேபோல் அனைத்து மதங்களிலும் இருக்கக்கூடிய நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்பவன்.

விமர்சனங்களை பார்த்துவிட்டு திரையரங்குக்கு செல்ல மாட்டேன். ஆனால் திரையரங்கில் சென்று படம் பார்த்துவிட்டு அனைத்து விமர்சனங்களையும் படிப்பேன் நான் நினைக்கின்றது சரியா என்று பார்ப்பேன். என்னுடைய  நண்பர் ஒருவர் ரஜினியின் முத்து படம் நன்றாக  இல்லை என்று கூறினார். அதனாலே இரண்டு மூன்று நாட்கள் படம் பார்க்காமல் விட்டு விட்டேன். ஆனால் திரையரங்கிற்கு சென்று பார்த்த பிறகு அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அப்பொழுது முடிவு செய்தேன் யார் பேச்சையும் கேட்டு சினிமா பார்க்கக்கூடாது என்று... அப்போதும் இப்போதும் நான் படம் பார்த்த பிறகு 15 விமர்சனங்களை படிப்பதுண்டு. சில கட்டுப்பாடுகளுடன் திரையரங்கு வாசலில் விமர்சனம் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோரிக்கை வைத்தார். விமர்சனங்கள் இல்லை என்றால் சிறிய படங்கள் மக்கள் கவனத்திற்கு வராமல் போய்விடும்” என்றார்.