×

யாரோ ஒருவர் ‘ஆன்மிக குரு’ என்று பேசினால் கண்ணை மூடிக்கொண்டு கேட்பீர்களா?- செல்வராகவன்

 

யாரோ ஒருவர் ஆன்மீக குரு என உளறிக்கொண்டிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு கேட்பீர்களா? என பிற்போக்கு பேச்சாளர் மகாவிஷ்ணுவின் விவகாரம் குறித்து இயக்குநர் செல்வராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை அவதூறுப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பிய விஷ்ணுவை சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது BNS இல் 4 பிரிவுகளிலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் 2016 கீழ் 92 A 192  - கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, 196 (1) (a) சமூகத்தில் வெறுப்பான தகவல்கள் தகவல்களை பரப்புவது, 352 பொது அமைதியை குழைக்கும் வகையில் பேசுவது, 353 (2) மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a)  பிரிவின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அட்டூழிய குற்றங்களுக்கான தண்டனை உட்பட  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரவித்துள்ள இயக்குநர் செல்வராகவன், “யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு.. ‘ஆன்மிக குரு’ என்று பேசினால் கண்ணை மூடிக்கொண்டு கண்டதை பேசினால் உடனே அதனை கேட்பீர்களா? உண்மையான ஆன்மிக குரு என்றால் நீங்கள் தேடி போக வேண்டாம் அவரே உங்களை தேடி வருவார். டிவியில் விளம்பரம் செய்துகொண்டு, காதில் மைக் மாட்டிக்கொண்டு நான் தியானம் சொல்லி தரேன் என சொல்லிக்கொண்டு இப்படி வரமாட்டார். உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே மாட்டார்.  உலகத்திலேயே மிக எளிதான விசயம் தியானம். இது புத்தரின் டெக்னிக். காலங்கள் போக போக நமக்குள் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் மறையும். எல்லாமே தானாக நடக்கும்” எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.