ஜவர்ஹலால் நேருவின் 136வது பிறந்த நாள் - செல்வப்பெருந்தகை மரியாதை
Nov 14, 2024, 17:00 IST
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் 136வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நவபாரத சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் பண்டித நேரு அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.