×

#BREAKING ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு!

 

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்துள்ளது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  24 பேர் ஏற்கனவே  கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர் என்பவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரனை பயன்படுத்தி கொலையை அரங்கேற்றியுள்ளதாக செல்வப்பெருந்தகை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கர் ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், செல்வப் பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்பதால் கைது செய்ய தயக்கமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.