மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் காலமானார்!!

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி.ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 98.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இன்று உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு அரசியல் கட்சியின் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி ஆர்.எம். வீரப்பனின் 98வது பிறந்த நாளை ஒட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.