×

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், ஒராண்டுக்கும் மேலாக ஜாமின் கிடைக்காததால் உடல்நலக்குறைவுடன் சிறையிலேயே காலம் தள்ளி வருகிறார். மேலும் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை எனவும் எங்கும் தப்பிச் செல்ல மாட்டேன் என்பதால் முதலில் ஜாமின் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த மனு மீதான அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.