என் உயிர் உங்கள் காலடியில்... செந்தில் பாலாஜி உருக்கம்
Sep 27, 2024, 21:44 IST
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் பொன்னாடை கொடுத்து வரவேற்றனர். அப்போது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்ததை அடுத்து அவரும் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடை கொடுத்து காலில் விழுந்து ஆசிப் பெற்றார்.