×

செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

 

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் மே 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் , உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தது.  இதையடுத்து செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாதங்களை முன் வைக்க அமலாக்கத்துறை 5 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில் அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கக் கூடாது என செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.