×

செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு

 

செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடியவடைய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல்,  அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியது. இதனைக்கேட்ட அமலாக்கத்துறை, “ஊழல் வழக்கு விசாரணையும், பண மோசடி விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியும். செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது” எனக் கூறியது.

இதனைக் கேட்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள், ஊழல் வழக்கு விசாரணையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுவிட்டால் பண மோசடி வழக்கு என்னவாகும்? ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? எனக் கேள்வி எழுப்பினர். நடுநிலையான அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டால், 6 மாதங்கள் ஆகும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜாமின் கோரிக்கை உள்ள நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பேசி வருகிறீர்கள். எங்கும் தப்பிச் செல்ல மாட்டேன் என்பதால் முதலில் ஜாமின் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வழக்கில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் அனைத்துமே அமலாக்கத்துறையால் திருத்தம் செய்யப்பட்டவை. தன் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் எனவு செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை முன் வைத்தது. அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.