×

செந்தில்பாலாஜி வழக்கு- ஆளுநர் அனுமதி தருவதில் தாமதம்: தமிழ்நாடு அரசு

 

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தருவதில் தாமதம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்போது நடுநிலையான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பது அவசியம், 2ஜி வழக்கு, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவற்றில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட வரலாறு உண்டு என அமலாக்கத்துறை தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, 73 அதிகாரிகள் மீது விசாரணை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் மீதான நடவடிக்கைக்கு ஒப்புதல், ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தால் விசாரணை தொடங்கும் என தெரிவித்தது. அதற்கு இந்த விவகாரத்தில் விசாரிக்க ஆளுநரின் அனுமதி தேவையில்லை என பாதிக்கப்பட்டோர் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் ஒருவாரத்தில் சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.