×

திமுக வஞ்சித்ததன் காரணமாக  பல லட்சம் ஏக்கருக்கு நெல் சாகுபடி பாதிப்பு - அண்ணாமலை குற்றச்சாட்டு!!

 

காவிரி நீரை குறித்த நேரத்தில், குறித்த அளவில் பெற்றுத் தராமல் திமுக வஞ்சித்ததன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக, கோதண்டராமரும், வைத்தியநாத ஈஸ்வரனும் குடிகொண்டு இருக்கும், அரியலூர் மண்ணில், பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ ஆரவாரத்துடன் நடந்தேறியது. 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துறையில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல் மட்டும் 2000 கோடி ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சரது ஆட்கள் மூலமாக கமிஷன் வசூலித்து, கோபாலபுரத்துக்கு கப்பம் கட்டி வருகிறார்.  பதிலுக்கு, அவர் மனைவி நடத்தி வரும், கருத்தரிப்பு மையத்தின் விளம்பரப் பலகைகளை, அரசுப் பேருந்துகளில் வைத்துக் கொள்கிறார். 

செந்தில் பாலாஜி Cash for Job Scam அமைச்சர் என்றால், சிவசங்கர், cash for transfer அமைச்சர்.  வாகன ஆய்வாளர் பதவிகளுக்காக 30 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது புகார் உள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் நல்லாட்சியில், அரியலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பிரதமரின் வீடு திட்டம், குழாய் குடிநீர், முத்ரா கடன் உதவி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கான நிதி, பிரதமரின் மருத்துவக் காப்பீடு என பல லட்சம் மக்கள் பலனடைந்துள்ளார்கள்.


 

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாமர மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவோம். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.