×

‘தன்னை தகாத உறவுக்கு அழைத்தார்’.... பிரபல நடிகர் மீது புகார்

 

நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.


நடிகர் ரியாஸ்கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை ரேவதி சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தனக்கு கேரள அரசு பாதுகாப்பு அளித்தால் சித்திக்கிற்கு எதிராக புகார் அளிக்க முன்வருவேன் என்றும் நடிகை ரேவதி கூறியுள்ளார்.

தமிழிலிலும், மலையாளத்திலும் பிரபல நடிகராக உள்ள ரியாஸ் கான் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.