×

கல்வி நிலையங்களில் பாலியல் புகார்கள்: ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..

 

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலர் இன்று மாலை ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

 தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன.

இந்நிலையில், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று மதியம் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து
மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப் பாளர்கள், ஆணையர்கள், பல் கலைக்கழக துணை வேந் தர்கள், கல்லூரிகளின் முதல் வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

 இதற்காக துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதி கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு வந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்த தகவலை அனைத்து துறையினருக்கும் தெரிவித்து கூட்டத்தில் அனை வரும் பங்கேற்பதற்கான ஏற்பாடு களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள் மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை செயலர் தீரஜ் குமார் மின்னஞ்சல் வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.