×

'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன்

 

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஐடி பிரிவு தலைவர் சிங்கை இராமச்சந்திரன், “ நாங்கள் அண்ணாமலையை ஒரு ஆளாகவே மதிக்குறதில்லை, அவர் ஒரு அரசியல் கோமாளி. அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வைக்க அண்ணா அண்ணா என்று எங்கள் அமைச்சர்களிடம் பேசியவர். அரவக்குறிச்சியில் என்ன ஜெயிக்க வையுங்களேன் என்று கெஞ்சியவர். இப்போது திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது.

எம்ஜிஆர் நாணயத்தை வெளியிட்டதால் மத்திய அரசுக்குதான் பெருமை. மத்திய அமைச்சரை அழைத்துவந்து எம்ஜிஆர் நாணயத்தை வெளியிட்டால் உலகம் முழுவதும் அவரது பெருமையை கொண்டுபோய் சேர்க்கலாம் என்பது நகைச்சுவை. எம்ஜிஆர் ஏற்கனவே உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது பாஜக தலைவர்களே இல்லை. அண்ணாமலை பிறக்கவே இல்லை. அமித்ஷா, மோடி செய்வது போன்று தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. இங்கு கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். நாகரீகமான அரசியலை மேற்கொள்வோம்” என்றார்.