சீதாராம் யெச்சூரி காலமானார்
Updated: Sep 12, 2024, 16:20 IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 72.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த யெச்சூரி, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு கவலைக்கிடமாக இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவரது உயிர் பிரிந்ததாக கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி மார்பு நோய் தொற்று சிகிச்சையும் சீதாராம் யெச்சூரிக்கு அளிக்கப்பட்டது.
1952 ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் பிறந்த யெச்சூரியின் தந்தை சர்வேஸ்வர சோமயாஜுலா யெச்சூரி மற்றும் தாயார் கல்பாகம் யெச்சூரி ஆவார். இவர்களது பூர்வீகம் ஆந்திரா. சீதாராம் யெச்சூரி, 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி மார்க்சிஸ்ட் அரசியல்வாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளராக பதவியேற்றார்.