×

#BREAKING சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நீக்கம்

 

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும்  உள்ள நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தன்னை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என செய்தியாளர் சந்திப்பில் நடிகை குஷ்பு கூறியிருந்தார். 

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்தததால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.