×

6 பேர் உபா சட்டத்தில் கைது..!

 

உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் என்ற அமைப்புக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆள் சேகரிப்பில் ஈடுபட்டதாக ஆறு நபர்களை உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப்பட்டது

இந்த ஆவணங்கள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் என். ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில், ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு யூடியூபில் மூலம் ஆள் சேர்க்கப்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.