×

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!

 

தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகிக்கும் எஸ்.கே.பிரபாகர், இனி வரும் ஆறு ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி தலைவராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு துறைக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் தமிழக அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில்,  டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்படாமல் இழுபறி  நீடித்து வந்தது. அண்மையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகிக்கும் எஸ்.கே.பிரபாகர், இனி வரும் ஆறு ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி தலைவராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.