×


சென்னையில் இன்று உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு!

 

கல்வி நிலையில் குறிப்பாக உயர்கல்வி, மக்களின் வாழ்வியல் திறன்களை வலுப்படுத்தும் வளமுடையது. அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு உயர்கல்வி உறுதுணையாக இருப்பதோடு அன்றி, வாழ்க்கையில் உயர்நிலையை எட்டுவதற்குரிய அடித்தளமாகவும் அமைகிறது. உயர்கல்வி, மனிதவள மேம்பாட்டுக்கான நவீன இலட்சியக் குறியீடுகளை நோக்கமாகக் கொண்டு, நாட்டை மேம்படுத்துவதற்கான அடிப்படை அணுகுமுறையைக் கொண்டுள்ளது. மேலும் இது, கி.பி. இரண்டாம் ஆயிரமாண்டைய முன்னேற்றத்தை நோக்கிய கோட்பாடுகளின் ஆதார அமைப்பாகும்.

நிறுவனங்களில் புதுமைகளையும், நேர்த்தியையும், மேலோங்க காண்பதே உயர்கல்வித்துறையின் தொலை நோக்கமாகும். கல்வித்தரத்தை மேம்படுத்துவதே முக்கியமான நோக்கமாக அமைகிறது. உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கும், பின்தங்கிய மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வியின் வாயில்களையும் வாய்ப்புகளையும் திறந்து வைப்பதும் உயர்கல்வித்துறையின் உள்ளார்ந்த விருப்பமாகும்.

இந்நிலையில் வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெறுகிறது. வெளிநாடுகளில் என்னென்ன பல்கலைக்கழகங்கள் உள்ளன? என்னென்ன படிப்புகள் உள்ளன? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த மாநாட்டின் மூலம் அறிந்துகொள்ளலாம்!