×

நமக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை; இருந்தாலும், 21% வாக்குகளை வாங்கியுள்ளோம்- எஸ்பி வேலுமணி

 

நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தல்  மோடியா? ராகுல் காந்தியா? என மக்கள் ஓட்டு போட்டனர்,  அதிமுகவிற்கு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் மட்டும் தான் சின்ன கூட்டணி தான் பிரதமர் வேட்பாளர் நமக்கு கிடையாது ஆனாலும் 21% வாக்கு  வாங்கி இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரி தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அதிமுக  கழக அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை வகித்தார். அதிமுக தலைமை நிலைய செயலாளர் வேலுமணி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் வரகூர் அருணாச்சலம், ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணி பேசுகையில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்றோம். ஆனாலும் 2026ல் எடப்பாடி முதல்வராவது உறுதி. அதற்கு இந்த மாவட்டம் என்ன செய்யப் போகிறது என்று ஆய்வு செய்ய தான் இங்கு வந்து உள்ளோம்.  குமரி மாவட்டத்திற்கு ஐந்து அமைச்சர்களை பெற்றுள்ளோம். தொடக்கத்தில் அதிமுக நன்றாக இருந்தது. இப்போதும் நல்லா தான் இருக்கிறது. கள ஆய்வுக்கு வரும்போது உறுப்பினர் கார்டு கிடைக்கவில்லை என பலர் புகாராக தெரிவித்தனர். கண்டிப்பாக உறுப்பினர் கார்டு இருக்க வேண்டும். உறுப்பினர் கார்டு இருக்கும்போது ஐந்து சதவீதம் வாக்குகள் உயரும். மேலும் நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தல்  மோடியா? ராகுல் காந்தியா? என மக்கள் ஓட்டு போட்டனர். அதிமுகவிற்கு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் மட்டும் தான். சின்ன கூட்டணி தான், பிரதமர் வேட்பாளர் நமக்கு கிடையாது ஆனாலும் 21% வாக்கு  வாங்கி இருக்கிறோம்” என்றார்.