நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது - எஸ்.பி.வேலுமணி!
நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினேன். அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியிருப்பது வருத்தமளிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.