ஜெயலலிதா உயிரிழந்ததற்கு இது தான் காரணம்?- வேதனையை கொட்டிய எஸ்பி வேலுமணி
ஜெயலலிதா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று இருந்தால் உயிரோடு இருந்திருப்பார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் அதிமுக துவங்கி 53 ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். அப்போது அதிமுகவினரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 2006ல் அதிகமான சட்டமன்ற தொகுதிகள் வெற்றிப்பெற்று எதிர்கட்சி தலைவராக ஜெயலலிதா வந்தார். அதைவிட அதிகமாக 75 தொகுதிகள் வெற்றிப்பெற்று எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக தற்போது உள்ளார். 2011, 2016-ல் தொடர் ஆட்சியை ஜெயலலிதா தலைமையில் வெற்றிபெற்றோம். ஆனால் ஜெயலலிதா அப்போது மட்டும் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று இருந்தால் உயிரோடு இருந்து இருப்பார்கள். ஆனால் யாருமே கேட்கவில்லை. 1991ல் 234 தொகுதியில் அதிமுக வெற்றி என பேசிவிட்டு இல்லை 232 தொகுதி வெற்றி என உளறியவாறு பேசினார்.
தொடர்ந்து பேசிய எஸ்பி வேலுமணி, அதிமுக தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் மீண்டும் பிரமாண்ட வெற்றி கிடைக்கும். அதனால் நாம் தான் 2026ல் மீண்டும் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றார்.