×

டிசம்பர் 09ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 09ம் தேதி கூடவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார் =. 

சபாநாயகர் அப்பாவு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 09ம் தேதி கூடவுள்ளதாக தெரிவித்தார். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.