×

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் - மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு!

 

பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு |உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. 

ஆளுநரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மசோதாக்களின் நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

இதன் காரணமாக வரும் சனிக்கிழமை அன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பிய நிலையில் சிறப்பு கூட்டம் கூடுகிறது.