நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் : திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள்..
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு, அரிசி மாவைக் கொண்டு குழந்தைகளின் பாதச்சுவடை அச்சிட்டு கிருஷ்ணரை வீட்டிற்கு வரவேற்பர்.
இதேபோல் பல்வேறு வழிபாட்டுத் தலங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தென்பகுதியில் உள்ள மாட வீதியில் குபேர மூளையில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த பூத நாராயண பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலிலும் ல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.