×

தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு - தமிழ்நாடு அரசு

 

தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு சுமார் 60 கோடி 12 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.  கோவையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக என்ஐஏ  நடத்திய விசாரணையில் ஜமேஷா மூபின் தற்கொலை படை தாக்குதல் நடந்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என்று முதல்வர்  மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் என அறிவித்துள்ளது.  1 டி.ஐ.ஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இப்பிரிவில் செயல்படுவார்கள்