×

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 60ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கனிஷ்கா(11) இதய பிரச்சினையால் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் கனிஷ்கா(11), புதுப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார். கனிஷ்காவிற்கு சிறுவயது முதலே இதய பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளிக்குச் சென்ற கனிஷ்கா வகுப்பறையில் மயக்கம் போட்டுள்ளார். உடனடியாக கனிஷ்காவை மீட்டு வடுகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கனிஷ்கா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நாம்கிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.