×

’கொடுத்தும் பயனில்லை’- மிதிக்க முடியாத மிதிவண்டியால் மாணவிகள் தவிப்பு

 

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவிகளுக்கு 113 அரசு விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கி உள்ளனர். இந்த சைக்கிள்கள் சில தரமற்ற முறையிலும்செயின் ப்ராக்கெட் இணைக்க முடியாமல் அதனைப் பழுது பார்க்காமலும் தரப்பட்டதால் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாததாலும் சைக்கிள்களில் காற்று நிரப்பப்படாமலும் பள்ளி நிர்வாகம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்ற குழந்தைகளுக்கு  சைக்கிள்களை ஓட்டிச் செல்ல முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். மாணவிகளின் மகிழ்ச்சி சிறிது நேரத்தில் சைக்கிளை மூச்சு வாங்க தள்ளிச்செல்லும் அவல நிலையை மாறியது. மற்றும் சைக்கிள் ஓட்டி செல்ல தெரியாத மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு தகவல் அளித்து வரும் வரை சைக்கிளுக்கு பாதுகாப்பாக இருந்து எடுத்துச் சென்றனர். பெற்றோர்கள் வராத மாணவிகள் சைக்கிளை தள்ளியபடி வீட்டுக்குச் சென்றனர். மாணவிகளுக்கு சைக்கிள் தரும் தகவல்களை முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டு இருந்தால் தன் பெற்றோர்களுடன் வந்து சைக்கிளைப் பெற்றுச் சென்றிருக்க ஏதுவாக இருந்திருக்கும் 
என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.