மதுரை ரயில்வே மைதானத்தை தாரைவார்க்க சாலமன் பாப்பையா எதிர்ப்பு
Updated: Nov 15, 2023, 15:31 IST
மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்தியக்கத்தில் தமிழறிஞர் சாலமன்பாப்பையா கையெழுத்திட்டார்.
மதுரை அரசரடியில் ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை கண்டித்து எம்பி சு.வெங்கடேசன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். மதுரை ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த மைதானத்தை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்திவருவதாகவும், ஆயிரக்கணக்கான மரங்கள் அங்கு இருபப்தாகவும் கூறும் சு.வெங்கடேசன் எம்பி, மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மதுரையைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.