×

சுசி லீக்ஸ்...  நடந்தது எப்படி?- பாடகி சுசித்ரா பரபரப்பு பதிவு

 

சுசி லீக்ஸ் என்ற பெயரில் முன்னணி நடிகர்கள், நடிகைகள்  தனிமையில், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களே வெளியிட்டது வேற யாரும் இல்லா என் முன்னாள் கணவர் கார்த்திக் தான் பிரபல பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு  2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் பாடகி சின்மயி-யின் புகைப்படங்களும் அடங்கும். இதையடுத்து “தன்னுடைய கணக்கிலிருந்து சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாடகி சுசித்ரா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதன் பிறகு சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை  என்றும், அவருக்கும் கார்த்திக்குமாருக்கும் விவாகரத்து ஆனதாக பரவலாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சுசி லீக்ஸ் வீடியோக்களை வெளியிட்டது நான் இல்லை, எனது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் தான் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுசித்ரா, என்னுடைய பாஸ்வேர்டுகளையும் கார்த்திக் குமார் தெரிந்து வைத்திருந்தார், என்னை பழிவாங்குவதற்காக தனுஷ் பரிந்துரையின் பேரில், சுசிலீக்ஸ் நடத்த அவர் ஒரு ஆர்மியை உருவாக்கி, அவர்களுக்கு எனது செல்போனில் இருந்த அத்துணை வீடியோக்களையும் அனுப்பினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.