பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக அறப்போராட்டம் - சீமான் ஆதரவு
Updated: Jan 26, 2024, 12:30 IST
பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மக்களால் 550வது நாட்களாக நடத்தப்பட்டு வரும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.