×

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்- சூரனை வதம் செய்த முருகர்

 

மகா கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா நவம்பர் 20ஆம் தேதி துவங்கியது. ஆறு நாட்கள் விரதம் இருந்து ஆறாம் நாளான இன்று மாலை 4 மணிக்கு நடைபெறக்கூடிய சூரசம்கார நிகழ்ச்சியை காண்பதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அதிகாலை முதலே திருச்செந்தூரை நோக்கி சாரை சாரையாக பக்தர்கள் படையெடுத்தனர். சூரசம்கார நிகழ்ச்சி பார்த்து கடலில் நீராடி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, திருச்செந்தூர் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. முதலில் சிங்க முகம் கொண்ட அசுரனையும், அதை தொடர்ந்து யானை முகம், அசுர முகம், சேவல் என அனைத்தையும் முருகர் வதம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ’முருகனுக்கு ஆரோகார’ என கோஷம் எழுப்பினர். திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றார்.