×

வாடிய முகம்! கர்நாடக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சூர்யா சாமி தரிசனம்

 

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நாளை கோவையில் நடைபெறவுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இன்று காலை கர்நாடக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கடந்த வாரம் நடிகர் சூர்யா, சென்னை சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோயிலுக்கு சென்றார்.

கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை எடுத்த சிவா, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களையும், ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தையும் எடுத்தார். அண்ணாத்த படத்திற்கு கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த சிவாவுக்கு மற்றொரு அடியாக சூர்யாவை வைத்து அண்மையில் எடுத்த கங்குவா படமும் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.