சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்..
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த 29ம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் 6 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.