சென்னையில் கொட்டும் மழை - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..
சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், யானைகவுனி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோலவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலையில் மீண்டும் மழை தொடங்கி பெய்து வருகிறது.
இதேபோல் சென்னை புறநகர் மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலுமே கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதுவும் காற்று இல்லாமல் பலத்த இடி, மின்னலுடன் சன்னாமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன் தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழை பாதிப்புக்கு உள்ளான பகுதிகளிலும், பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முதலில் யானைக்கவுனி பகுதியில் நடைபெற்று மழை பரமாரிப்பு பணிகளை பார்வையிட்டார். தாவ்ழான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வுன் போது அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார். தொடர்ந்து சென்னை பெரம்பூர் , புளியந்தோப்பு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அமைச்சர் சேகர் பாபு உடன் அந்தப்பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலவரிடம் விளக்கமளித்தார்.