பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!
உடல் நலக்குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட சபை இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா-வின் பேராயராகவும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தவர் எஸ்றா சற்குணம். 86 வயதான அவர், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் எஸ்றா சற்குணம் உடல் நலக் குறைவால் கடந்த 22 ம் தேதி சென்னையில் காலமானார்.
எஸ்றா சற்குணத்தின் மகள்கள் வெளிநாட்டில் இருந்ததால் மகள்கள் வருகைக்காக உடல் எம்பாமிங் செய்யப்பட்டு கீழ்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று, குடும்பத்தினர்,அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகத்தில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி கே.என்.நேரு சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்
பேராயர் எஸ் ரா சற்குணத்தின் உடல் மதியம் 2 மணி வரை வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் மாலை 4 மணியளவில் கீழ்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.