சிப்காட் மூலம் பெண்களுக்கான பிரத்யேக தங்கும் விடுதி - இன்று திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..
சென்னை சிப்காட் நிறுவனத்தின் மூலமாக, வல்லம் வடகாலில் தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்தாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். இதில் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கென பிரத்யேக தங்கும் விடுதி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயெ முதன் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் - வடகால் கிராமத்தில் ₹706.50 கோடி செலவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கென பிரமாண்ட தங்கும் விடுதி வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளனர்.
இந்த விடுதி வளாக குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கவுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த தகவலை உறுதி படுத்தினார். இந்த திறப்பு விழாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு உள்ளிட்ட பல்ர் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.