×

திமுக பவள விழா இலட்சினையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. 

 

அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய  முதல்வர் ஸ்டாலின்,  திமுகவின் பவள விழாவுக்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திறந்து வைத்தார்.  

பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்த தினம் இன்று, தமிழ்நாடு முழுவதும் திராவிட கட்சிகளால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு , கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அண்ணாவின்  உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.


 
இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் பவள விழாவுக்கான லட்சினையை  திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்.17ம் தேதி  பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் என மூன்றையுன் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் என்பதால் ‘பவள விழாவாக’ விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி ‘திமுக பவள விழா இலட்சினை’யை திறந்து வைத்தார்.