×

"தி கோட்"... சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! ஃபர்ஸ்ட் ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா?

 

தி கோட் திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா , லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கோட்’ படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தி கோட் திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிடவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.