×

தொப்பூர் சாலை விபத்தில் 4 பேர் பலி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
 

 

தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 3 லாரிகள், 2 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது நடந்த இந்த விபத்தில் உடல் கருகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்புகள் இன்னும் அதிகிரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 



இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தர்மபுரி - தொப்பூர் கணவாய் பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இத்துயர சம்பவத்தால்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிச்சயம் துணை நிற்கும்.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.