ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்கிறார் தமிழக வீரர் நடராஜன்..!
Nov 25, 2024, 05:45 IST
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதியின் ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 577 வீரர்கள் தேர்வாகி உள்ளனர் .
இந்நிலையில் எந்த முறையும் இல்லாமல் இந்த முறை அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த Yorker King நடராஜனை டெல்லி அணி 10.75 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
நடராஜனை ஏலத்தில் எடுக்க பெங்களூரு அணிக்கும் டெல்லி அணிக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் டெல்லி அணி நடராஜனை தட்டித்தூக்கி ஏலத்தில் எடுத்துள்ளது.