×

தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

 

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து அரசாணை (நிலை) எண். 48,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ப.மே1) துறை, நாள் 20.04.2007-ன் படி உரிய ஆணைகள் வெளியிடப்பட்டது. மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களை தலைவராகக் கொண்டும் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 3 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்.121, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே1(2) துறை, நாள் 08.09.2023-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.