×

சனாதனத்தை அழிக்க முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்

 

சனாதனம் ஒரு வாழ்வியல் முறை என்றும் அதனை ஒழிக்க நினைக்க நினைக்க அது வளரும் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள காமராஜ் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சைக்கான சிறப்பு நிலையத்தை தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெம் செல் சிகிச்சை முறையால் சிக்கலான பல நோய்களுக்கு சிறப்பான தீர்வு கிடைத்து வருகிறது. சனாதனத்தை அழித்து, ஒழித்துவிட முடியாது. சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதற்றத்தில் பேசுகிறார். 

சனாதனம் என்பது ஒரு வாழ்வியல் முறை. சனாதனத்தை ஒழிப்போம் என சொல்ல சொல்ல, அது வளரும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவோரின் மனங்களை, யாரும் புண்படுத்த வேண்டாம். சனாதனத்தை ஒழிப்போம் என சொல்பவர்கள், இந்து அறநிலையத்துறையே வேண்டாம் என சொல்ல முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதுகுறித்த புரிதல் வேண்டும். ஆனால் அந்த புரிதல் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.