×

விஜய்யின் மாநாட்டை பார்த்து அச்சம் ஏன்?- தமிழிசை

 

த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுப்பதில் ஏன் இவ்வளவு பயம்? என நடிகர் விஜய்க்காக தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிய் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “கார் ரேஸ் நடத்த ஒரே நாளில் அனுமதி பெற முடிகிறது. ஆனால் விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி தருவதில் என்ன தாமதம்? த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுப்பதில் ஏன் இவ்வளவு பயம்? விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்க்றார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு மாநாட்டிற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். விஜய்யின் கட்சியையும் தடுக்கிறார்கள். அவரது படத்தின் காட்சிக்கும் தடை விதிக்கிறார்கள். விஜய்க்கு ஆதரவாக எல்லாம் பேசவில்லை. ஆனால் ஒரு புதிய கட்சி வந்தால் என்ன? மக்கள் யாருக்கு தருகிறார்களோ தரட்டும். ஆனால் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தமிழ்த்திரையுலகிலும் பாலியல் தொந்தரவுகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதை பல முன்னணி நடிகைகளே சொல்கிறார்கள். இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். அரசியலை பொருத்தமட்டில் ஆணாதிக்கம் அதிகம் உள்ள துறையாக இருக்கிறது. ஆனாலும் எங்களைப் போன்ற பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுக்கிறார்கள். பிறகு அரசியலில் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்து, திமுக தவறான தகவலை பரப்புகிறது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கலாம், திட்டத்தை ஏற்பதாக ஏற்கனவே கூறிவிட்டு, தற்போது மறுப்பது ஏற்புடையது அல்ல. மற்ற மாநிலங்களிடம் திமுக அரசு தன்னுடைய உரிமையை, தன் மானத்தை விட்டு கொடுத்து வருகிறது. அமெரிக்காவுக்கு முதல்வர் சென்றும் பெரியளவில் முதலீடுகள் வந்ததுபோல் தெரியவில்லை.” என்றார்.