×

'தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள்’- சேகர்பாபுக்கு தமிழிசை பதிலடி

 

ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது என பாஜக மூத்த தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குளத்தில்கூட தாமரை வளரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தமிழிசை செளந்தரராஜன், “அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார்  தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்... குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே...  வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்... அரசுஅமைக்கும் பூங்காவிலேயே  தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்....