×

எங்களுக்குள்ளும் இருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்”- தமிழிசை

 

ராமனை நீங்கள் விடுக்க முடியாது, ராமனை நீங்கள் தடுக்க‌ முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா "ராம்" பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா "ராம்" ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டா "ராம்" அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா"ராம்"  ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்"

ராமனை நீங்கள் விடுக்க முடியாது....
ராமனை நீங்கள் தடுக்க‌ முடியாது....
 எங்களுக்குள்ளும் இருக்கிறார் "ராம்"....
உங்களுக்குள்ளும் இருக்கிறார் "ராம்"....

அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை
நெருப்பில் சுடுகிறார்  "ராம்"....

வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி பொறுப்பாய் ஆசி வழங்கும் ராமன் - அதுவே
நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்.....

எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்....
எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே "ராம்"நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை... அங்கு தேடி மோடி வந்தார்....
உல்லாச பயணம் வரவில்லை....
11- நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்....

அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க
தேரோட்டியின் தமையனாய் வந்தான் ராமன்....
ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்து ஒரு கூட்டம் அன்று....

இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு தழைக்கப்போகிறது பெருங்கூட்டம் ராமராஜ்ஜியத்தில்....

அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை.....
காணொளியில் பார்க்க தடையாம்- தமிழகத்தில்....

வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று...வென்று  பெற்றவர்களுக்கு
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....
தமிழ்நாடும் திரும்பி விட்டான்......
விரும்பி வணங்கிட தமிழர்கள் தயார்....
தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்....
கத்தியால் அல்ல.... பக்தியால்....
மககள் சக்தியால்...
ஜெய்ஸ்ரீராம்....
ஜெய்ஸ்ரீராம்....
ஜெய்ஸ்ரீராம்....
என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை....”எனக் குறிப்பிட்டுள்ளார்.