மக்கள் அனைவர் வாழ்விலும் தீமைகள் நீங்கி நல் ஒளி பிறக்கட்டும் - அண்ணாமலை வாழ்த்து
Nov 12, 2023, 11:05 IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.